- வீடு›
- பொழுதுபோக்கு›
- ஆதிபுருஷ் படம் தமிழகத்தில் முதல் நாள் வசூல் செம டல்
ஆதிபுருஷ் படம் தமிழகத்தில் முதல் நாள் வசூல் செம டல்
By: Nagaraj Sun, 18 June 2023 12:02:55 PM
சென்னை: வசூல் டல்... தமிழகத்தில் ஆதிபுருஷ் முதல் நாள் வசூல் செம டல். அதனால் படம் செமத்தியாக அடிவாங்கியுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஆதிபுருஷ். ஓம் ரனாவத் இயக்கிய இப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்திருந்தார்.
மோசமான விமர்சங்களை இப்படம் சந்தித்தாலும், உலகளவில் ரூ. 140 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், உலகளவில் வசூல் வேட்டையாடி வரும் ஆதிபுருஷ் திரைப்படம் தமிழகத்தில் அடிவாங்கியுள்ளது.
இப்படம் முதல் நாள் தமிழகத்தில் ரூ. 1 கோடி கூட வசூல் செய்யவில்லை என ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் ரூ. 140 கோடி வசூல் செய்துள்ள இப்படத்திற்கு தமிழகத்தில் கிடைத்துள்ள வரவேற்பு இதுதான்..