Advertisement

ஆதிபுருஷ் போஸ்டர் போஸ்டர் பாடலுக்கு செம வரவேற்பு

By: Nagaraj Sun, 23 Apr 2023 6:53:50 PM

ஆதிபுருஷ் போஸ்டர் போஸ்டர் பாடலுக்கு செம வரவேற்பு

சென்னை: ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு... நடிகர் பிரபாஸ் நடித்துள்ள 'ஆதிபுருஷ்' படத்தின் மாஸ் போஸ்டருடன், ஜெய் ஸ்ரீராம் பாடலானது, அட்சய திரிதியை முன்னிட்டு, வெளியிடப்பட்ட நிலையில், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

டி சீரிஸ் பூஷன் குமார் & கிரிஷன் குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார் மற்றும் ரெட்ரோ ஃபைல்ஸின் ராஜேஷ் நாயர் ஆகியோர் இணைந்து தயாரிக்க, இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் 'ஆதி புருஷ்' திரைப்படம் பிரம்மாண்டாக உருவாகியிருக்கிறது.

இந்நிலையில் அட்சய திரிதியை முன்னிட்டு, இப்படத்தின் பிரத்யேக போஸ்டருடன், ஜெய் ஸ்ரீராம் பாடல் வெளியாகியுள்ளது. போஸ்டரை பார்க்கும்போது ராமபிரானின் தோற்றத்திற்கு பக்காவாக பொருந்தியவாறு, பிரபாஸ் கையில் வில் அம்புடன் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார்.

adipurush,expectation,prashant neil,salar,prabhas,fans ,ஆதிபுருஷ்,  எதிர்பார்ப்பு, பிரசாந்த் நீல், சலார், பிரபாஸ், ரசிகர்கள்

தற்போது வெளியாகியுள்ள ஜெய் ஸ்ரீராம் பாடலைக் கேட்கும்போது, உடம்பெல்லாம் புல்லரிக்கிறது.

தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகும் 'ஆதிபுருஷ்' ஒரு பான்-இந்தியா திரைப்படம் என கூறப்படும் நிலையில், பிரபாஸ் கேரியருக்கு இப்படம் மிகமுக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

பாகுபலி: தி பிகினிங் மற்றும் பாகுபலி 2: தி கன்க்ளூசன் ஆகிய 2 பிளாக்பஸ்டர் ஹிட்களுக்குப் பின் பான் இண்டியன் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்ட பிரபாஸால் தனது அடுத்த இரண்டு திரைப்படங்களான 'சாஹோ' மற்றும் 'ராதே ஷ்யாம்' மூலம் அதே வெற்றியைப் பிரதிபலிக்க முடியவில்லை.

இந்நிலையில் 'ஆதிபுருஷ்' படம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் நிலையில், இப்படத்திற்குப் பிறகு, 'கே.ஜி.எஃப்' இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் புதிய படமான 'சலார்' ல் பிரபாஸ் நடிக்கவிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|