Advertisement

ஆதிபுருஷ் ஓடிடியில் வெளியானது

By: vaithegi Fri, 11 Aug 2023 3:41:01 PM

ஆதிபுருஷ் ஓடிடியில் வெளியானது

ராமாயணக் கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கிய திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . இதையடுத்து இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்திருந்தனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவான இந்த படம் இந்தி, தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் கடந்த ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியானது.

‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தின் டீசர் வெளியான போதே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டன.அதன் பின்னர் இதனை உணர்ந்த படக்குழு, மேலும் ரூ.100 கோடி செலவு செய்து கிராபிக்ஸை மேம்படுத்தியது.

ott,adipurush , ஓடிடி,ஆதிபுருஷ்


இருப்பினும் படம் வெளியாகி கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. படத்தில் வரும் காட்சிகள், வசனங்கள் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக இருப்பதாக கூறி பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒரு கட்டத்தில் படக்குழு நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியது.

இந்நிலையில், இந்த படம் எவ்வித விளம்பரங்களும் இன்றி இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளது. ‘ஆதிபுருஷ்’ படத்தின் இந்தி பதிப்பு நெட்ஃப்ளிக்ஸ் தளத்திலும், தமிழ் , மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகள் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி உள்ளது.

Tags :
|