- வீடு›
- பொழுதுபோக்கு›
- ராட்சசன் படத்தின் இயக்குனரின் புதிய படத்தில் ஒப்பந்தம் ஆன அதிதி ஷங்கர்
ராட்சசன் படத்தின் இயக்குனரின் புதிய படத்தில் ஒப்பந்தம் ஆன அதிதி ஷங்கர்
By: Nagaraj Sat, 22 Apr 2023 09:37:58 AM
சென்னை: ராட்சசன் படத்தை இயக்கிய ராம் குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிகை அதிதி ஷங்கர் நடிக்க உள்ளதாக கோலிவுட்டில் தகவல்கள் பரவி வருகிறது.
விஷ்ணு விஷால் நடிப்பில் இயக்குநர் ராம் குமார் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் ‘ராட்சசன்’.
இப்படத்திற்குப் பின் ராம் குமார் தன் அடுத்தப் படத்தை இயக்க உள்ளார். இதில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கிறார் என்கிற அறிவிப்பு சில நாள்களுக்கு முன் வெளியானது.
இந்நிலையில், இப்படத்தின் நாயகியாக நடிகை அதிதி ஷங்கர் ஒப்பந்தமாகியுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் ’விருமன்’ திரைப்படம் மூலம் அறிமுகமாகி நல்ல வரவேற்பைப் பெற்றார். தற்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ‘மாவீரன்’ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.