Advertisement

அதர்வா தம்பி ஆகாஷ் நடிக்கும் படத்தில் கதாநாயகியாகும் அதிதி சங்கர்

By: Nagaraj Tue, 21 Mar 2023 08:44:20 AM

அதர்வா தம்பி ஆகாஷ் நடிக்கும் படத்தில் கதாநாயகியாகும் அதிதி சங்கர்

சென்னை: அதர்வா தம்பி ஆகாஷ் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

அஜித்துக்கு பில்லா, ஆரம்பம் ஆகிய இரண்டு வெற்றிகளைக் கொடுத்தவர் விஷ்ணுவர்தன். தற்போது அதர்வாவின் தம்பி ஆகாஷை ஹீரோவாக வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக அதிதி சங்கர் நடிக்கிறார்.

விருமன் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்து வருகிறார் அதிதி ஷங்கர். அது முடிந்தவுடன் இப்படத்தின் வேலைகள் தொடங்கும்.

actress,aditi sankar,movie, ,அதிதி சங்கர், பில்லா, விஷ்ணுவர்தன்

ஆகாஷின் மாமனார் சேவியர் பிரிட்டோ இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். சேவியர் பிரிட்டோ விஜய்யின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்கத்திலும், தயாரிப்பிலும் இது பெரிய டீம் என்பதால் நிச்சயம் படம் வேற லெவலை அடிக்கும் என்கிறது கோலிவுட். இந்த தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் வெகு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
|