Advertisement

வசூலில் முன்னேற்றம் கண்டுள்ள அடியே திரைப்படம்

By: Nagaraj Tue, 29 Aug 2023 10:13:26 PM

வசூலில் முன்னேற்றம் கண்டுள்ள அடியே திரைப்படம்

சென்னை: நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ள அடியே படம் வெளியாகி நான்கு நாட்களில் ரூபாய் 8.95 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி அடியே என்ற படம் திரையரங்குகளில் வெளியானது.

collection,amount,ft. film,reviews,4 days,rs.8.95 crores ,வசூல், தொகை, அடியே படம், விமர்சனம், 4 நாட்கள், ரூ.8.95 கோடி

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவான இப்படத்தில் கௌரி கிஷன் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் முக்கியமான கதாபாத்திரத்தில் வெங்கட் பிரபு, மிர்ச்சி விஜய் ஆகியோர் நடித்துள்ளனர்.

தற்போது அடியே படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இப்படம் வெளியாகி நான்கு நாட்களில் ரூபாய் 8.95 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Tags :
|
|