Advertisement

23 ஆண்டுகளுக்கு பின்... ராமராஜன் படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா

By: Nagaraj Sat, 12 Nov 2022 11:03:36 PM

23 ஆண்டுகளுக்கு பின்... ராமராஜன் படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா

சென்னை: 23 ஆண்டுகளுக்குப் பிறகு ராமராஜன் நடிக்கும் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார். அண்ணன் படத்திற்கு பின்னர் தற்போதுதான் இருவரும் இணைகின்றனர்.

90 களில் முன்னணி நடிகராக இருந்த ராமராஜன், கடைசியாக 2012-ம் ஆண்டு வெளியான 'மேதை' படத்தில் நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சாமானியன் படத்தில் மீண்டும் நாயகனாக அவர் நடிக்கிறார். இந்த படத்தை ஆர். ராஜேஷ் இயக்க எட்சட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார்.

ilayaraja,ramarajan,acting,23 years,film,music ,இளையராஜா, ராமராஜன், நடிப்பு, 23 ஆண்டுகள், படம், இசை

மேலும் படத்தில் ராமராஜனுடன் ராதாரவி, எம்.எஸ். பாஸ்கர், மைம் கோபி உள்ளிடோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது.


இந்த நிலையில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு ராமராஜன் நடிக்கும் சாமானியன் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார். கடைசியாக ராமராஜன் நடிப்பில் 1999-ல் வெளியான அண்ணன் படத்திற்கு இளையராஜா இசைமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|