- வீடு›
- பொழுதுபோக்கு›
- லியோ அபார வெற்றியை அடுத்து மீண்டும் கூட்டணி சேரும் விஜய் -லோகேஷ்
லியோ அபார வெற்றியை அடுத்து மீண்டும் கூட்டணி சேரும் விஜய் -லோகேஷ்
By: Nagaraj Thu, 26 Oct 2023 07:27:48 AM
சென்னை: லியோ மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் விஜய் - லோகேஷ் கூட்டணியில் புதிய படம் உருவாக உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
விஜய்- லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் கடந்த அக்டோபர் 19-ம் தேதி ‘லியோ’ திரைப்படம் வெளியானது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் வசூல் ரீதியாக உலக அளவில் 400 கோடி ரூபாயைக் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு நடிகர் விஜய் லோகேஷூடன் ‘மாஸ்டர்’ படத்தில் இணைந்திருந்தார். அவர்கள் இருவரும் இரண்டாவது முறையாக இணையும் திரைப்படம் ‘லியோ’. இந்தத் திரைப்படம் லோகேஷ் கனகராஜின் சினிமாடிக் யுனிவர்ஸில் இருப்பதால் லோகேஷ்- விஜய் இருவரும் மூன்றாவது முறையாக இணைவது உறுதி எனத் தயாரிப்பாளர் லலித் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
‘லியோ’ படத்திற்கு கிடைத்துள்ள நெகடிவ் விமர்சனங்களையும் உற்று நோக்குவதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இந்த விமர்சனங்களைத் தான் தன்னுடைய அடுத்தப் படமான ‘தலைவர் 171’ படத்திற்கு எடுத்து சென்று, அந்தப் படத்தை மேலும் சிறப்பாக கொடுக்க முயற்சிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
‘தலைவர் 171’ படம் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் துவங்கவுள்ள நிலையில், அதற்கான முன் தயாரிப்பு பணிகளில் தற்போது லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.