Advertisement

ஜவான் படத்தின் வெற்றிக்கு பின் மீண்டும் ஷாரூக்- அட்லீ கூட்டணி?

By: Nagaraj Fri, 03 Nov 2023 7:08:17 PM

ஜவான் படத்தின் வெற்றிக்கு பின் மீண்டும் ஷாரூக்- அட்லீ கூட்டணி?

சென்னை: ஜவான் வெற்றிக்கு பின் மீண்டும் ஷாருக்கான் - அட்லீ கூட்டணி இணையப்போவதாக பாலிவுட் திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இந்திய சினிமாவில் தற்போது மோஸ்ட் வாட்டெண்ட் இயக்குனர் என பெயர் எடுத்து இருப்பவர் அட்லீ. தமிழ் சினிமாவில் இருந்து ஹிந்திக்கு சென்ற இவர் ஷாருக்கானை வைத்து மாபெரும் வெற்றி படத்தை கொடுத்துள்ளார்.

பாலிவுட் கிங் கான், சூப்பர்ஸ்டார், பாலிவுட் பாட்ஷா என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஷாருக்கானின் அதிக வசூல் செய்த திரைப்படமாக அட்லீயின் ஜவான் அமைந்துள்ளது. ரூ. 1100 கோடிக்கும் மேல் வசூல் செய்து ஜவான் படம் நேற்று ஷாருக்கானின் பிறந்தநாள் அன்று ஓடிடி-யில் வெளிவந்துள்ளது.

atlee,alliance,shah rukh,jawan,fans,grossed rs.1000 crores ,அட்லீ, கூட்டணி, ஷாரூக், ஜவான், ரசிகர்கள், ரூ.1000 கோடி வசூல்

இந்நிலையில், ஜவான் வெற்றிக்கு பின் மீண்டும் ஷாருக்கான் - அட்லீ கூட்டணி இணையப்போவதாக பாலிவுட் திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஷாருக்கான் தற்போது கைவசம் வைத்துள்ள படங்களை முடித்தபின் அட்லீ இயக்கத்தில் நடிக்க ஓகே சொல்லி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இதனால் கண்டிப்பாக மீண்டும் இந்த கூட்டணி இணைந்தால் அப்படமும் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Tags :
|
|
|