Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ரசிகரின் கமெண்ட்டிற்கு சூப்பரான முறையில் பதிலளித்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

ரசிகரின் கமெண்ட்டிற்கு சூப்பரான முறையில் பதிலளித்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

By: Monisha Fri, 12 June 2020 5:13:00 PM

ரசிகரின் கமெண்ட்டிற்கு சூப்பரான முறையில் பதிலளித்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

தமிழ் சினிமாவில் நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து, நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் நடித்து வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது நடிப்பில் உருவாகியுள்ள க/பெ ரணசிங்கம்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் தனது அட்டகாசமான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தார். இந்த புகைப்படத்திற்கு கமெண்ட் அளித்த ஒரு ரசிகர், 'உங்களுக்காக நான் சாகத் தயார்' என்று கூறியுள்ளார்.

aishwarya rajesh,fan,comment,instagram ,ஐஸ்வர்யா ராஜேஷ்,ரசிகர்,கமெண்ட்,இன்ஸ்டாகிராம்

இதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா ராஜேஷ், "உங்கள் அன்புக்கு மிக்க நன்றி. ஆனால் தயவுசெய்து இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். வாழ்க்கை என்பது சாவதற்கு இல்லை. நான் என்றும் உங்கள் நண்பனாக இருப்பேன். எனவே இதுபோன்ற வார்த்தைகளை மீண்டும் சொல்ல மாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்யுங்கள்" என்று பதிலளித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த பதில் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags :
|