Advertisement

டூப் பயன்படுத்தாமல் சண்டைக்காட்சியில் நடித்த அஜித்

By: Nagaraj Mon, 30 Jan 2023 12:14:59 PM

டூப் பயன்படுத்தாமல் சண்டைக்காட்சியில் நடித்த அஜித்

சென்னை: துணிவு படத்தில் அஜித் டூப் பயன்படுத்தினாரா என்ற சர்ச்சைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக போனி கபூர் வெளியிட்ட வீடியோ செம வைரலாகி வருகிறது.

ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த மூன்றாவது படம் தான் துணிவு. அந்த படத்திற்கும் அஜித் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூல் பெற்றது.

ajith,no dope,stunts,acting,question ,அஜித், டூப் பயன்படுத்தவில்லை, சண்டைக்காட்சிகள், நடித்தார், கேள்வி

அஜித் துணிவு படத்தில் டூப் பயன்படுத்திதான் ரிஸ்க் ஆன ஸ்டண்ட் காட்சிகளை முடித்தார் என தொடர்ந்து ஆரம்பத்தில் இருந்தே விமர்சிக்கப்பட்டு வருகிறது. எப்போதும் மீடியாவில் இருந்து விலகியே இருக்கும் அஜித் இந்த விஷயம் பற்றியும் விளக்கம் எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் தற்போது இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக போனி கபூர் ஒரு விஷயம் செய்து இருக்கிறார். துணிவு மேக்கிங் வீடியோவை பதிவிட்டு டூப் பற்றிய ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார். அஜித் தான் சண்டை காட்சிகளில் நடித்தார் என காட்டத்தான் இந்த வீடியோ வெளியிட்டாரா என எல்லோரும் தற்போது கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Tags :
|
|
|