Advertisement

22 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கூட்டணி சேரும் அஜித்- ஐஸ்வர்யா ராய்?

By: Nagaraj Tue, 17 Jan 2023 10:15:13 PM

22 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கூட்டணி சேரும் அஜித்- ஐஸ்வர்யா ராய்?

சென்னை: 22 ஆண்டுகளுக்கு பின்னர் அஜித்துடன் இணைந்து நடிகை ஐஸ்வார்யா ராய் நடிக்க உள்ளார் என்று தெரிவிக்கின்றனர். இது குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 11ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘துணிவு’. இதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் ஏகே 62 படத்தில் நடிக்கிறார்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் அஜித் நடிக்கும் ஏகே62வது படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

aishwarya rai,ajith,ak 62, ,அஜித், ஏகே 62, ஐஸ்வர்யா ராய்

அதன்படி இப்படத்தின் OTT உரிமையை Netflix நிறுவனம் பெற்றுள்ளது. இதனை OTT நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் ஒரு போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2000 ஆம் ஆண்டு வெளிவந்த கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|