- வீடு›
- பொழுதுபோக்கு›
- இயக்குனரை ராசி பார்த்து தேர்வு செய்கிறார் அஜித்?
இயக்குனரை ராசி பார்த்து தேர்வு செய்கிறார் அஜித்?
By: Nagaraj Sun, 18 June 2023 12:03:27 PM
சென்னை: ராசி பார்த்து இயக்குனரை தேர்வு செய்கிறார் அஜித் என்று ஒரு தகவல் கோலிவுட்டில் உலா வந்து கொண்டு இருக்கிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது தயாராகி வரும் படம் "விடாமுயற்சி". இதனை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குகிறார்.
இந்நிலையில் அஜித் இயக்குனரை எவ்வாறு தேர்ந்தெடுக்கிறார் என தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அஜித் ஒரு இயக்குனரை தேர்ந்தெடுக்கிறார் என்றால் அதில் பல விஷயம் இருக்குமாம்.
அதில் முக்கியமாக இருப்பது கதையாகும். அவருக்கு கதை பிடித்தால் தான் அடுத்த கட்டத்திற்கு செல்வாராம். அடுத்து, அவர் ஒரு இயக்குனரை தேர்வு செய்த பிறகு பத்து நாட்களில் ஏதாவது நல்லது நடக்கிறதா என பார்ப்பாராம்.
அவ்வாறு நடந்தால் முழு நம்பிக்கையாக அந்த இயக்குனர் படத்தில் நடிப்பார். பிறகு இயக்குனர் எப்படிப்பட்ட குணமுடையவர், எவ்வாறு நடந்து கொள்கிறார் என கவனிப்பாராம். மேலும், தனக்கு இந்த இயக்குனர் செட் ஆவாரா என யோசித்து தான் முடிவெடுப்பார் என கூறப்படுகிறது. இவ்வாறு தான் நடிகர் அஜித் தன்னுடைய இயக்குநரை தேர்வு செய்கிறார் என தெரிய வந்துள்ளது.