Advertisement

உலகம் முழுவதும் பைக்கில் சுற்ற அஜித் முடிவு

By: Nagaraj Wed, 19 Oct 2022 12:11:00 PM

உலகம் முழுவதும் பைக்கில் சுற்ற அஜித் முடிவு

சென்னை : மோட்டார் சைக்கிளில் உலகம் முழுவதும் சுற்றுவதற்குத் திட்டமிட்டுள்ளார் அஜித்குமார் என்று கோலிவுட்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

படங்களில் நடிப்பது மட்டுமின்றி, அஜித்குமார் தனது ஓய்வு நேரத்தை மோட்டார் சைக்கிளில் பயணம் செய்வதிலும், பிரபலமான இடங்களுக்கு செல்வதிலும் செலவிடுகிறார்.

சில நாட்களுக்கு முன் பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு மோட்டார் சைக்கிளில் சுற்றுலா சென்றார். விசாகப்பட்டினத்தில் துணிவு படப்பிடிப்பில் பங்கேற்றுவிட்டு, கார்கில் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த மோட்டார் சைக்கிளில் இமயமலைக்கு சென்றார்.

ajith,end,thadvu film,pongal,bike ride ,அஜித், முடிவு, துணிவு படம், பொங்கல், பைக்கில் பயணம்

கேதார்நாத் மற்றும் பத்ரி நாத் கோவில்களுக்கு சாமி தரிசனம் செய்தார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தில் அஜித் நடிக்கிறார்.

இந்தப் படத்தை முடித்துவிட்டு, மோட்டார் சைக்கிளில் உலகம் முழுவதும் சுற்றுவதற்குத் திட்டமிட்டுள்ளார் அஜித்குமார். அதாவது மோட்டார் சைக்கிளில் 18 மாதங்கள் தொடர்ந்து 62 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். ஒன்றரை வருட மோட்டார் சைக்கிள் பயணத்தை முடித்துக் கொண்ட அவர் தனது அடுத்த படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அஜித்தின் துணிவு படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

Tags :
|
|
|