Advertisement

யுவன் சங்கர் ராஜாவின் பதிவால் உற்சாகம் அடைந்துள்ள அஜித் ரசிகர்கள்

By: Nagaraj Tue, 15 Dec 2020 10:39:15 PM

யுவன் சங்கர் ராஜாவின் பதிவால் உற்சாகம் அடைந்துள்ள அஜித் ரசிகர்கள்

இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா அவருடைய ஒலிப்பதிவுக் கூடத்தில் வேலை செய்யும் ஒரு புகைப்படத்தை 'வலிமை' என்ற ஒற்றை வார்த்தையுடன் ஒரு ஸ்மைலியையும் பதிவிட்டார். இது அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நேர்கொண்ட பார்வை' படத்திற்குப் பிறகு வினோத், அஜித், யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி இணையும் படம் 'வலிமை'. இப்படத்தின் படப்பிடிப்பு கொரானோ தளர்வுகளுக்குப் பிறகு கடந்த மாதம் ஐதராபாத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

கடந்த வாரம் விஜய்யின் 65வது படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அப்போது அஜித் ரசிகர்களும் 'வலிமை' படம் பற்றி ஏதாவது அப்டேட் கொடுங்கள் என படக்குழுவினரை கேட்டு சமூக வலைத்தளங்களில் தொடர் பதிவுகளை இட்டனர்.

strength,yuvan shankar,theme musics,record ,வலிமை, யுவன் சங்கர், தீம் மியூசிக்குகள், பதிவு

அப்டேட்டுக்கு ஒரு அப்டேட் கொடுக்கும் விதமாக அஜித்தின் பிஆர்ஓ., சுரேஷ் சந்திரா மூலம் முறையான அறிவிப்பு வெளிவரும் வரை காத்திருங்கள் என்று ஒர் அறிக்கை மூலம் தெரிவித்தார்கள். இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா அவருடைய ஒலிப்பதிவுக் கூடத்தில் வேலை செய்யும் ஒரு புகைப்படத்தை 'வலிமை' என்ற ஒற்றை வார்த்தையுடன் ஒரு ஸ்மைலியையும் பதிவிட்டிருந்தார்.

அதற்கே அஜித் ரசிகர்களும், யுவன் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். அஜித், யுவன் கூட்டணி இணைகிறது என்றாலே இருவரது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி கூடுதலாகும். அஜித்திற்கு யுவன் கொடுத்த தீம் மியூசிக்குகளே அதற்குக் காரணம்.

Tags :