Advertisement

அஜித் படத்தில் நடிக்கிறாரா பாலிவுட் பிரபல நடிகர்

By: Nagaraj Fri, 29 July 2022 2:00:28 PM

அஜித் படத்தில் நடிக்கிறாரா பாலிவுட் பிரபல நடிகர்

சென்னை: அஜித் படத்தில் சஞ்சய் தத்... நடிகர் அஜித்தின் ஏ.கே.61 படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

47-வது மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொள்வதற்காக திருச்சி சென்று வந்த நடிகர் அஜித்குமார், விரைவில் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் 'AK61' படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள உள்ளார். அந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக சென்னையில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு வரும் நிலையில், பாலிவுட்டின் மூத்த நடிகர் சஞ்சய் தத் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிப்பதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது.

poster release date ajith sanjay dutt title kollywood ,போஸ்டர், வெளியீட்டு தேதி, அஜித், சஞ்சய்தத், தலைப்பு, கோலிவுட்

போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார். பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்த 'கேஜிஎஃப் 2' படத்தில் கன்னடத்தில் அறிமுகமான சஞ்சய் தத், 'ஏகே61' படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாவதாக தெரிகிறது.

இயக்குனர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் அஜித்தின் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஏகே61 படத்தில் நடித்துள்ளார். 'வலிமை' படத்தில் க்ளீன் ஷேவ் செய்யப்பட்ட தோற்றத்தில் காணப்பட்ட அவர், 'ஏகே61' படத்தில் நீண்ட தாடியுடன் நடித்துள்ளாராம்.

இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என்றும், அந்த போஸ்டரில் படத்தின் வெளியீட்டு தேதி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :