- வீடு›
- பொழுதுபோக்கு›
- வலிமை படப்பிடிப்பில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த நடிகர் அஜித்
வலிமை படப்பிடிப்பில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த நடிகர் அஜித்
By: Nagaraj Sat, 12 Dec 2020 3:25:24 PM
ஹைதாபாத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் யோகி பாபு, மற்றும் படக்குழுவினருடன் இணைந்து தல அஜித் கிரிக்கெட் விளையாடி உள்ளார் என்று தெரிய வந்துள்ளது.
போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் படம் வலிமை. நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி அமைந்துள்ளது.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து தெலுங்கு இளம் நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும், பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள்.
சமீபத்தில் தான் வலிமை படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள பிரபல
ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைப்பில் நடைபெற்றது. மேலும்
அடுத்த கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் துவங்கவுள்ளது.
இந்நிலையில்
ஹைதாபாத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் யோகி பாபு, மற்றும்
படக்குழுவினருடன் இணைந்து தல அஜித் கிரிக்கெட் விளையாடி உள்ளார். இதனை
வலிமை படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சின்னத்திரை நடிகர்
கதிர் என்பவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.