Advertisement

அஜித் 62-வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்

By: vaithegi Thu, 16 Feb 2023 11:07:02 AM

அஜித்  62-வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்

அஜித்குமார் துணிவு படம் வெளியானதும் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதையடுத்து தற்போது பயணத்தை முடித்து விட்டு சென்னை திரும்பி தனது 62-வது படத்தில் நடிக்க தயாராகி கொண்டு வருகிறார்.

இப்படத்தை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இயக்க ஏற்கனவே முடிவாகி இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவரை படத்தில் இருந்து கழற்றி விட்டுள்ளனர். விக்னேஷ் சிவன் சொன்ன கதை திருப்தி அளிக்காததால் படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் அவரை நீக்கி விட்டதாக தகவல் ஒன்று பரவி உள்ளது.

ajith film ,அஜித்  ,படம்

எனவே விக்னேஷ் சிவனுக்கு பதிலாக அஜித்தின் 62-வது படத்தை மகிழ்திருமேனி இயக்க இருப்பதாகவும் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. விஜய் வாரிசு படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடிக்க தொடங்கி உள்ளார்.

இந்த படம் வருகிற அக்டோபரில் ஆயுத பூஜையில் திரைக்கு வரும் என அறிவித்துவுள்ளனர். அதுபோன்று அஜித் பட அறிவிப்பு வெளியாகும்போதே ரிலீஸ் தேதியும் வெளியாகும் என தெரிகிறது. 4 மாதங்களில் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க திட்டமிட்டு உள்ளனர்.

Tags :