Advertisement

வலிமை படப்பிடிப்பில் அஜித்குமாருக்கு காயம்

By: Monisha Fri, 20 Nov 2020 11:19:19 AM

வலிமை படப்பிடிப்பில் அஜித்குமாருக்கு காயம்

வில்லன்களுடன் மோதுவது போன்ற காட்சி படமாக்கப்பட்ட போது பைக் கவிழ்ந்து நடிகர் அஜித்குமாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

நடிகர் அஜித்குமார் வலிமை படத்தில் நடிக்கிறார். வினோத் இயக்குகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன்பே முடிந்தது. தற்போது ஊரடங்கு தளர்வு அறிவித்ததை தொடர்ந்து மீண்டும் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் படப்பிடிப்பை நடத்தினர். அஜித்குமார் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார். அப்போது சண்டை காட்சியை படமாக்கபட்டது.

valimai,shooting,ajithkumar,injury,fight scene ,வலிமை,படப்பிடிப்பு,அஜித்குமார்,காயம்,சண்டை காட்சி

அதில் அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து வில்லன்களுடன் மோதுவது போன்று இந்த காட்சி படமாக்கப்பட்டது.

அப்போது திடீரென்று பைக் கவிழ்ந்தது. இதில் அஜித்குமாருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது நேரம் ஓய்வுக்கு பின் மீண்டும் அந்த காட்சியில் அஜித்குமார் நடித்து கொடுத்து விட்டு சென்னை திரும்பினார்.

Tags :
|