Advertisement

தெலுங்கு ரீமேக் என்று அஜித் நிராகரித்த சூப்பர் ஹிட் படம் கில்லி

By: Nagaraj Thu, 07 July 2022 3:03:29 PM

தெலுங்கு ரீமேக் என்று அஜித் நிராகரித்த சூப்பர் ஹிட் படம் கில்லி

சென்னை: கில்லி படத்தின். கதையை இயக்குனர் தரணி முதன்முதலில் நடிகர் அஜித்திடம் தான் சொல்லியிருக்கிறார். ஆனால் அது தெலுங்கு ரீமேக் என்பதால் அஜித் மறுக்கவே விஜய் நடித்து ஹிட் ஆகி உள்ளது. இத்தகவல் தற்போது இணையத்தில் வெகு வேகமாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. வம்சி இயக்கிவரும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

ajith,director dharani,denyagu,gilli,vijay,super hit ,அஜித், இயக்குனர் தரணி, நிராகரிப்பு, கில்லி, விஜய், சூப்பர் ஹிட்

விஜய்யின் திரைவாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்திய திரைப்படம் கில்லி. தரணி இயக்கிய இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது.


இன்று வரை தளபதி விஜய் என்று சொன்னால், நியாபகம் வரும் சில முக்கிய படங்களில் கில்லியும் ஒன்றாகும். இந்நிலையில், இப்படத்தின் கதையை இயக்குனர் தரணி முதன் முதலில் நடிகர் அஜித்திடம் தான் கூறியுள்ளாராம்.

ஆனால், இப்படம் தெலுங்கு ரீமேக் என்பதினால், அஜித் நிராகரித்து விட்டாராம். இதன்பின், இந்த கதையை விஜய்யிடம் கூறி ஓகே செய்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

Tags :
|
|
|