Advertisement

படப்பிடிப்பு இடையில் ஓய்வில் மீண்டும் பைக் டூர் ஆரம்பித்த அஜித்

By: Nagaraj Sat, 18 June 2022 8:47:26 PM

படப்பிடிப்பு இடையில் ஓய்வில் மீண்டும் பைக் டூர் ஆரம்பித்த அஜித்

சென்னை: படப்பிடிப்புக்கு இடையில் ஒருவாரம் கிடைத்த கேப்பில் அஜித்தை அவர்கள் மீண்டும் பைக் டூர் ஆரம்பித்துவிட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
அஜித் வினோத் கூட்டணியில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வலிமை.வலிமை படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது.
இதை தொடர்ந்து அஜீத் மற்றும் வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் AK 61 படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் துவங்கியது.வலிமை படத்திற்கு ஏற்பட்ட எதிர்மறை விமர்சனங்கள் இந்த படத்திற்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக அஜித் மற்றும் வினோத் கடுமையாக உழைத்து வருவதாக கூறப்படுகிறது.

அஜித்.ஏ கே 61 படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் வீரா,அஜித்துடன் பயணிக்கும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக மட்டுமே தகவல் வந்துள்ளது.

ajith,photos,players,wagah border,uk,europe ,அஜித், புகைப்படங்கள், வீரர்கள், வாகா எல்லை, இங்கிலாந்து, ஐரோப்பா

முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து தற்போது படக்குழு இரண்டாம் கட்ட படப்பிடிப்பை புனேவில் நடத்த திட்டமிட்டுள்ளது அடுத்தவாரம் புனேவில் படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில், நடிகை மஞ்சுவாரியார் கலந்துகொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளது.

இந்நிலையில் இந்த ஒருவாரம் கிடைத்த கேப்பில் அஜித்தை அவர்கள் மீண்டும் பைக் டூர் ஆரம்பித்துவிட்டார். அவர் பைக்கிலே இங்கிலாந்து ஐரோப்பாவிற்கு பைக் டூர் செல்ல உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதற்கு முன்பாக ’வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் BMW பைக்கில் இந்தியா – பாகிஸ்தான் எல்லையான வாகா எல்லையில் ரசிகர்கள் மற்றும் இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுடன் இணைந்து எடுத்த புகைப்படங்கள் வெளியாகினது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|