Advertisement

விடா முயற்சி படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடமாம்

By: Nagaraj Fri, 07 July 2023 11:49:51 PM

விடா முயற்சி படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடமாம்

சென்னை: விடாமுயற்சியில் படத்தில் அஜித்குமார் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அஜித் கடைசியாக 2010ல் வெளியான அசல் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் தற்போது தனது 62வது படமான விடாமுயற்சி படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து சியா திருமேனி இயக்கியுள்ளார்.

அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானாலும் அடுத்தக்கட்ட பணிகள் இன்னும் தொடங்கவில்லை. படப்பிடிப்பு எப்போது என்று தெரியவில்லை.

ajith,double role,movie, ,அஜித், டபுள் சர்ப்ரைஸ், விடா முயற்சி

ஜனவரியில் வெளியான துணிவு வெளியாகி 5 மாதங்கள் ஆகியும் இன்னும் அடுத்த படம் தொடங்கவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தற்போது அஜித் ஒரு முடிவை எடுத்துள்ளார்.

தற்போதைய தகவலின்படி ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் அஜித்குமார் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அஜித் கடைசியாக 2010ல் வெளியான அசல் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|