Advertisement

அஜித் நடிக்க உள்ள 62-வது திரைப்பட அப்டேட்

By: vaithegi Mon, 01 May 2023 11:44:33 AM

அஜித் நடிக்க உள்ள 62-வது திரைப்பட அப்டேட்

நடிகர் அஜித்குமார் இன்று தனது 52-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு வருகின்றனர்.

இதன் இடையில் அவர் நடிக்க உள்ள அவரது 62-வது திரைப்படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

update,ajith ,அப்டேட் ,அஜித்

இந்நிலையில், அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் படத்தின் தலைப்புடன் இயக்குனர் யார் என்பதையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே அதன்படி அஜித்தின் 62-வது திரைப்படத்திற்கு “விடாமுயற்சி” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தை பிரபல இயக்குனரான மகிழ் திருமேனி இயக்குகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார்.

மேலும் விரைவில் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. அஜித்தின் பிறந்தநாளையொட்டி படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் அனைவரும் அவருடைய பிறந்தநாளுடன் சேர்த்து அப்டேட்டையும் சேர்த்து கொண்டாடி வருகின்றனர்.

Tags :
|