Advertisement

அஜித் எடுத்துள்ள முடிவு? 18 மாதம் ஓய்வாம்?

By: Nagaraj Wed, 19 Oct 2022 5:32:26 PM

அஜித் எடுத்துள்ள முடிவு? 18 மாதம் ஓய்வாம்?

சென்னை: விக்னேஷ் சிவன் படத்தை முடித்து கொடுத்து ஒன்றரை வருடம் சினிமாவில் இருந்து ஒதுங்கி ஓய்வு எடுக்க போகிறார் அஜித் என்று தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் இது உண்மையாக இருக்காது என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இந்த வருடம் வலிமை படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

ajith,retirement,next film,localities,trip,fans ,அஜித், ஓய்வு, அடுத்த படம், வட்டாரங்கள், ட்ரிப், ரசிகர்கள்

தற்போது அஜித் இந்த படத்தை முடித்துவிட்டு 18 மாதங்கள் சினிமாவிற்கு ஓய்வு தரவுள்ளதாக ஒரு செய்தி பரவி வருகிறது.

இதுகுறித்து விபரமறிந்த வட்டாரங்கள் கூறுகையில், அஜித் அப்படி மொத்தமாக ப்ரேக் எடுப்பாரா என்று தெரியவில்லை. தற்போது எப்படி ஓய்வு கிடைக்கும் போது ட்ரிப் செல்கிறாரோ அப்படி தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

Tags :
|
|