- வீடு›
- பொழுதுபோக்கு›
- குடும்பத்தினருடன் அஜித் எடுத்த புகைப்படம் வைரல்
குடும்பத்தினருடன் அஜித் எடுத்த புகைப்படம் வைரல்
By: Nagaraj Tue, 14 Mar 2023 11:10:55 PM
சென்னை: நடிகர் அஜித்குமார் தனது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோருடன் எடுத்த புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு அஜித்குமார் நடித்த துணிவு படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றது. அடுத்து 62வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க இருப்பதாக தெரிகிறது. படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
இந்த நிலையில் அஜித்குமார் தனது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோருடன் எடுத்த புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படங்களை ஷாலினி பகிர்ந்துள்ளார்.
குழந்தைகளுடன் இருப்பது ஆன்மாவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அஜித்குமார் ஏற்கனவே பல்வேறு இடங்களில் பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். வடஇந்தியா முழுவதும் பைக்கில் சுற்றி வந்தார்.
அடுத்து தனது 62-வது படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு உலக நாடுகளில் பைக் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்த பயணத்துக்கு பரஸ்பர மரியாதை பயணம் என்று பெயர் வைத்துள்ளனர்.