Advertisement

பெட்ரோல் பங்கில் நடந்து வரும் அஜித் வீடியோ செம வைரல்

By: Nagaraj Thu, 30 June 2022 11:23:29 AM

பெட்ரோல் பங்கில் நடந்து வரும் அஜித் வீடியோ செம வைரல்

சென்னை: அஜித் என்ன செய்தாலும் அதை வைரலாக்கிவிட்டுதான் அவரது ரசிகர்கள் அடுத்த வேலையை பார்ப்பார்கள். அந்த வகையில் தற்போது, பெட்ரோல் பங்கில் அஜித் செம மாஸாக நடந்து வரும் வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது. இதை இணையத்தில் செம வைரலாக்கி வருகின்றனர் ரசிகர்கள்.


திரையுலகில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் அஜித் குமார். இவர் நடிப்பில் தற்போது AK 61 திரைப்படம் உருவாகி வருகிறது. எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் இரண்டு வேடத்தில் நடிக்கிறார் அஜித்.

ajith,social website,viral,video,fans ,அஜித், சமூக வலைதளம், வைரல், வீடியோ, ரசிகர்கள்

இப்படத்தின் First லுக் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதற்கிடையில் நடிகர் அஜித் தற்போது தனது நண்பர்களுடன் நாடு முழுவதும் பைக் ரைட் சென்றுள்ளார். ஷூட்டிங் தொடங்குவது தாமதம் என்பதால் பைக் ரைட் சென்றுவிட்டார் என்று கூறப்படுகிறது.

அங்கிருந்து எடுக்கப்படும் அஜித்தின் புகைப்படங்கள், வீடியோக்கள் தொடர்ந்து சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது, பெட்ரோல் பங்கில் அஜித் செம மாஸாக நடந்து வரும் வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் ரசிகர்கள் செம வைரலாக்கி வருகின்றனர்.

Tags :
|
|
|