Advertisement

அலியாபட் படத்துக்கு தடைவிதிக்க கோர்ட்டில் வழக்கு

By: Monisha Mon, 28 Dec 2020 09:21:18 AM

அலியாபட் படத்துக்கு தடைவிதிக்க கோர்ட்டில் வழக்கு

மும்பை அருகே உள்ள காமத்திபுரா பகுதியில் 1960-களில் கொலை, கொள்ளை, போதை பொருள் கடத்தல், பாலியல் தொழில் என்று நிழல் உலக பெண் தாதாவாக வாழ்ந்தவர் கங்குபாய் கத்தியவாதி. பின்னர் பாலியல் தொழிலாளர்கள் வாழ்வு மேம்பட உழைத்தார். அவரது வாழ்க்கை மாபிய குயீன்ஸ் ஆப் மும்பை என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்தது. அந்த புத்தகத்தின் அடிப்படையில் உண்மை சம்பவங்களை மையமாக வைத்து கங்குபாய் கத்தியவாதி என்ற படத்தை இந்தி டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி உள்ளார்.

இதில் கங்குபாய் கத்தியவாதி கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகை அலியாபட் நடித்துள்ளார். இம்ரான் ஹாஸ்மி, அஜய்தேவ்கான், சாந்தனு மகேஸ்வரி ஆகியோர் கவுரவ தோற்றத்தில் வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது.

alia bhatt,court,case,sex workers,film ,அலியாபட்,கோர்ட்,வழக்கு,பாலியல் தொழிலாளர்கள்,கங்குபாய் கத்தியவாதி

இந்த நிலையில் கங்குபாயின் மகன் பாபுஜி ராவ்ஜி ஷா படத்துக்கு தடைவிதிக்கும்படி மும்பை சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். கங்குபாய் பற்றி அவதூறு காட்சிகள் படத்தில் இடம்பெற்று உள்ளதாக மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கில் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை அடுத்த மாதம் 7-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags :
|
|