Advertisement

விஜய்க்கு பதில் ஜவான் படத்தில் சிறப்பு தோற்றத்தில் அல்லு அர்ஜூன்

By: Nagaraj Mon, 13 Feb 2023 10:43:11 PM

விஜய்க்கு பதில் ஜவான் படத்தில் சிறப்பு தோற்றத்தில் அல்லு அர்ஜூன்

சென்னை: ஷாருக் நடிக்கும் ஜவான் படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய்க்கு பதிலாக தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

சுகுமார் இயக்கிய புஷ்பா படத்தின் மூலம் அல்லு அர்ஜுன் இந்திய அளவில் பிரபலமானார். ஸ்டைலிஷ் ஸ்டாரான இவர் தற்போது பாலிவுட் அறிமுகத்தை நெருங்கியுள்ளார். ஜவான் படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது ஒரு கெஸ்ட் ரோல். ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க அல்லு அர்ஜுனை படத்தின் இயக்குநர் அட்லீ நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு அவர் ஒப்புக்கொண்டால் அல்லு அர்ஜுனின் முதல் ஹிந்திப் படமாக ‘ஜவான்’ அமையும். ஷாருக்கானின் ‘பதான்’ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைத் தொடர்ந்து, அட்லீ இயக்கத்தில் அவர் நடித்துள்ள படம் ‘ஜவான்’. நகைச்சுவை கேரக்டரில் யோகிபாபு நடிக்கிறார். ஜவான் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

atli,jawaan film,special appearance,allu,dialogue ,அட்லி, ஜவான் படம், சிறப்பு தோற்றம், அல்லு , பேச்சுவார்த்தை

இப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
'இப்படத்தின் படப்பிடிப்பு ஓரிரு மாதங்களில் முடிவடையும் என கூறப்படுகிறது. ‘பதான்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் சல்மான் கான் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தன. அந்த வகையில் பான் இந்தியா படமாக உருவாகி வரும் ‘ஜவான்’ படத்தில் விஜய் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின.

ஆனால் விஜய் தற்போது லியோ படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால் ஜவான் படத்தில் நடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விஜய்க்கு நிகரான மாஸ் நடிகரை படத்தில் நடிக்க வைக்க பல்வேறு நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் அட்லீ.

இப்படத்தில் நடிக்க அல்லு அர்ஜுனை படத்தின் இயக்குநர் அட்லீ நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரின் ஒப்புதலுக்கு அட்லீ காத்துக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

Tags :
|
|