Advertisement

எனக்கு அறுவை சிகிச்சையா... அதெல்லாம் வதந்தி; பிரபல நடிகை மறுப்பு

By: Nagaraj Mon, 03 Oct 2022 4:40:50 PM

எனக்கு அறுவை சிகிச்சையா... அதெல்லாம் வதந்தி; பிரபல நடிகை மறுப்பு

ஆந்திரா : தமிழில் முகமூடி, பீஸ்ட் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள பூஜா ஹெக்டே, தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நாயகியாக நடித்துள்ளார். பூஜா ஹெக்டே நடிப்பில் சமீபத்தில் வெளியான அனைத்து படங்களும் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் பூஜா ஹெக்டேவின் மூக்கு அழகாக இல்லை என்றும், அதை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய வெளிநாடு செல்ல இருப்பதாகவும் தகவல்கள் பரவின. இதற்கு பூஜா ஹெக்டே விளக்கம் அளித்துள்ளார்.

hindi films,hyderabad,my body,pooja hegde,surgery ,அறுவை சிகிச்சை, பீஸ்ட், பூஜா ஹெக்டே, மகேஷ் பாபு, முகமூடி

சமீபகாலமாக முன்னணி நடிகர், நடிகைகள் மூக்கு அறுவை சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதாக வதந்திகள் பரவி வருகின்றன. இது உண்மையல்ல.எனது உடலில் எங்கும் அறுவை சிகிச்சை இல்லை.அறுவைசிகிச்சை தேவையில்லை.

ரசிகர்கள் .இதுபோன்ற வதந்திகளை நம்பாதிங்கள் .நான் தற்போது ஐதராபாத்தில் இருக்கிறேன்.ஒரு மாத விடுமுறைக்கு வெளியூர் செல்கிறேன், அடுத்து மகேஷ் பாபுவுடன் நடிக்கிறேன்.இவ்வாறு அவர் தனது பதிலை தெரிவித்தார்.

Tags :