Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • நடிகர் விஷால் நடித்து வரும் படத்தின் ஆச்சரியமான அறிவிப்பு இன்று வெளியாகும்!

நடிகர் விஷால் நடித்து வரும் படத்தின் ஆச்சரியமான அறிவிப்பு இன்று வெளியாகும்!

By: Monisha Mon, 22 June 2020 12:26:06 PM

நடிகர் விஷால் நடித்து வரும் படத்தின் ஆச்சரியமான அறிவிப்பு இன்று வெளியாகும்!

நடிகர் விஷால் நடித்து வந்த ’துப்பறிவாளன் 2’ மற்றும் ‘சக்ரா’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மிஷ்கின் இயக்கத்தில் உருவான ’துப்பறிவாளன் 2’ படம் ஊரடங்கு முடிந்த உடன் வெளியாகும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் விஷால் நடித்து வரும் இன்னொரு திரைப்படம் ’சக்ரா. எம்எஸ் ஆனந்தன் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து தற்போது ஊரடங்கு நேரத்தில் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

actor vishal,cinema,fans,chakra ,நடிகர் விஷால்,சினிமா,ரசிகர்கள்,சக்ரா

இந்த நிலையில் ’சக்ரா’ படத்தின் ஆச்சரியமான அறிவிப்பு ஒன்று வரும் 22ம் தேதி (இன்று) வெளியிட இருப்பதாக படக்குழுவினர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஆச்சரியமான அறிவிப்பு என்னவாக இருக்கும் என விஷால் ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

விஷால், ரெஜினா, ஷ்ராதா ஸ்ரீநாத், ஸ்ருஷ்டி டாங்கே, ரோபோ சங்கர், மனோபாலா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Tags :
|
|