Advertisement

மணிரத்னம் – கமல் இணையும் படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சி

By: Nagaraj Thu, 20 Apr 2023 11:34:06 PM

மணிரத்னம் – கமல் இணையும் படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சி

சென்னை: மணிரத்னம் – கமல் இணையும் படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கோலிவுட்டில் தகவல் பரவி வருகிறது.

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் சுமார் 500 கோடி ரூபாய் வசூல் செய்தது.

director,nayantara,ponniyin selvan, ,நயன்தாரா, பொன்னியின் செல்வன், மணிரத்னம்

தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையையும் பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதையடுத்து கமல்ஹாசனின் படத்தை மணிரத்னம் இயக்க உள்ளார். நாயகன் படம் வெளிவந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்துள்ளனர்.

இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. அப்படி நடந்தால் கமல்ஹாசனும் நயன்தாராவும் இணையும் முதல் படமாக இது அமையும்.

Tags :