Advertisement

ரஜினியுடன் கபில்தேவ் உள்ள பழைய புகைப்படம்... இணையத்தில் செம வைரல்

By: Nagaraj Fri, 19 May 2023 4:23:14 PM

ரஜினியுடன் கபில்தேவ் உள்ள பழைய புகைப்படம்... இணையத்தில் செம வைரல்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' ஆடியோ வெளியீட்டு விழா மற்றும் 'ஜெயிலர்' படத்தின் முதல் சிங்கிள் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் அவர்களுக்கு வேறு ஒரு விஷயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிரிக்கெட் போட்டியைய் பொறுத்தவரை உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளில் தற்போது இந்தியாவும் மிக முக்கிய நாடாக இருக்கலாம். ஆனால் இதற்கெல்லாம் வித்திட்டது 1983 உலகக்கோப்பைதான் என்றால் அதை யாராலும் மறுக்க முடியாது. ஜூன் 25, 1983ல் நடந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இதை சாதித்தது கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி என்பதை யாராலும் மறுக்க இயலாது. அது நடந்து கிட்டத்தட்ட 40 வருடங்களை நெருங்கும் நிலையிலும், கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, கபில்தேவ் என்ற பெயருக்கும், அந்த மனிதருக்கும் இருக்கும் மவுசு இன்னும் குறையவே இல்லை.

kapildev,rajinikanth,photo,instagram,internet,viral ,கபில்தேவ், ரஜினிகாந்த், புகைப்படம், இன்ஸ்டாகிராம், இணையம், வைரல்

அதேபோல்தான் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை அன்றும் இன்றும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான். இவருக்கான மவுசும் தனிதான். கபில்தேவ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருவரும் சந்தித்துக்கொண்ட நிலையில், அறையில் இருக்கும்போது, இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

கபில்தேவ், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், 'பெரிய மனிதருடன் இருப்பது ஒரு மரியாதை மற்றும் பாக்கியம்!' என்று குறிப்பிட்டு, இந்த புகைப்படத்தைப் பகிர்ந்ரத்தம் சுத்தம் அடைய செய்யும் தன்மை கொண்ட நார்த்தங்காய்துள்ளார். மிகப்பெரிய இரண்டு ஸ்டார்களும் சந்தித்த இந்த அரிய புகைப்படமானது, ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதோடு, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
|