Advertisement

கோலிவுட்டை பரபரப்பாக்கிய ஒரு பழைய புகைப்படம்

By: Nagaraj Thu, 08 Oct 2020 3:56:42 PM

கோலிவுட்டை பரபரப்பாக்கிய ஒரு பழைய புகைப்படம்

ஒரு பழைய புகைப்படம் கோலிவுட்டில் பரபரப்பை கிளப்பி விட்டுள்ளது. தற்போது அதற்கு நடிகை லஷ்மி மேனன் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை லஷ்மி மேனன் கருணாஸூக்கு ஜோடியாக திண்டுக்கல் சாரதி 2 படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என்று குறிப்பிட்டு இருவரும் உள்ளது போன்ற ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலானது.

கருணாஸ் கதாநாயகனாக நடித்த படங்களில் கவனம் ஈர்த்த திரைப்படம் திண்டுக்கல் சாரதி. அந்த படத்தில் அழகான பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு அவரை எப்போதும் சந்தேகக் கண்ணில் பார்க்கும் கணவனாக அவர் நடித்திருந்தார். இந்நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது எடுக்க உள்ளார்கள்.

lakshmi menon,party,description,karunas,dindigul driver ,லஷ்மி மேனன், தரப்பு, விளக்கம், கருணாஸ், திண்டுக்கல் சாரதி

இந்த பாகத்தில் கருனாஸுக்கு ஜோடியாக நடிகை லஷ்மி மேனன் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் உலா வந்தன. அதுமட்டுமில்லாமல் லஷ்மி மேனனும் கருணாஸும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வைரலாக பரவியது.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள லஷ்மி மேனன் தரப்பு அந்த புகைப்படம் கொம்பன் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டது என்!று விளக்கம் அளித்துள்ளது.

Tags :
|