- வீடு›
- பொழுதுபோக்கு›
- அனிருத் மற்றும் லோகேஷ் கனகராஜ் லியோ குறித்த அப்டேட் ஒன்று வெளியீடு
அனிருத் மற்றும் லோகேஷ் கனகராஜ் லியோ குறித்த அப்டேட் ஒன்று வெளியீடு
By: vaithegi Mon, 16 Oct 2023 11:12:56 AM
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வரும் வியாழன் அன்று வெளியாக உள்ள திரைப்படம் லியோ. இந்த படத்தை செவென்த் ஸ்க்ரீன் பட நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இதையடுத்து இந்த படத்தின் சென்சார் வேலைகள் முடிந்து, படத்திற்கான தியேட்டர் ஒப்பந்தங்கள் முடிந்து, பெரும்பாலான இடங்களில் டிக்கெட் முன்பதிவு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இச்சமயத்தில் தான் அனிருத் மற்றும் லோகேஷ் கனகராஜ் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதாவது தற்போது படத்தின் பின்னணி இசை, இசை கோர்ப்பு, உள்ளிட்டவை முடிந்து ரிலீசுக்கு ரெடி என்பதை குறிப்பிடும் வகையில் Lock & Loaded என்று இசையமைப்பாளர் அனிருத் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் பதிவிட்டு உள்ளனர். இதனை அடுத்து அதன் பின்புறம் தளபதி விஜயின் வெறித்தனமான ஒரு பார்வை லுக் ஒன்று இருக்கிறது. படம் பக்கா ஆக்சன் என இயக்குனர் லோகேஷ் கூறி வரும் வேளையில் இப்படியான போஸ்டர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து உள்ளது.
ஏற்கனவே, ஒரு நேர்காணலில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறுகையில் , படத்தின் முதல் பாதிக்கான பின்னணி இசை பணிகளை இசையமைப்பாளர் அனிருத் முடித்துவிட்டார். அந்த முதல் பாதியை பார்த்துவிட்டு ‘பிளாக்-ஓ பிளாக் பஸ்டர்’ என்று அனிருத் சிலாகித்து குறிப்பிட்டாராம். தற்போது 2-ம் பாதி வேலைகளும் முழுதாக முடிந்துவிட்டது.