Advertisement

கவின் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியீடு

By: vaithegi Fri, 26 May 2023 2:14:29 PM

கவின் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியீடு

டாடா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கவினின் மார்க்கெட் எங்கேயோ சென்றுவிட்டது என்றே கூறலாம். இதையடுத்து இவர் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி கவினின் அடுத்த படத்தை பிரபல நடன இயக்குனரான சதீஷ் இயக்குகிறார்.

இப்படத்தின் மூலம் சதீஷ் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தை ரோமியோ பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு கூடுதல் பலம் என்றால் அனிருத் இசையமைப்பது தான். படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார்.

update,gavin ,அப்டேட் ,கவின்

இந்த நிலையில், இந்த படம் பற்றியும் அனிருத்துடன் இணைந்தது குறித்தும் கவின் தனது ட்வீட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ” நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. எனக்கு எப்போதுமே பெரிய மற்றும் சிறிய கனவுகள் இருந்தன, அவை எப்போதாவது நிறைவேறுமா என்று ஆவலுடன் காத்திருந்தேன்.

அதில் ஒன்று அனிருத் சார் என்னுடைய படத்திற்கு இசையமைப்பது. அந்த கனவு இப்போது நிறைவேறிவிட்டது. அனிருத் சார் இந்த படத்தில் நீங்கள் ஒரு பாடலாவது பாட வேண்டும். நீங்கள் என் படத்திற்கு இசையமைப்பது என் வாழ்நாள் முழுவதும் ஆசை நிறைவேறியது போல் இருக்கிறது. சதீஸ் உங்களுக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். எனது தொழில் பயணத்தின் ஒரு பகுதியாகயிருந்த அனைவருக்கும் எனது நன்றிகள்” என நெகிழ்ச்சியுடன் அவர் பதிவிட்டு உள்ளார்.

Tags :
|