Advertisement

தான் எழுதிய புத்தகத்தை நடிகர் விஜயிடம் வழங்கிய தொகுப்பாளர் ரம்யா

By: Nagaraj Mon, 16 Jan 2023 9:16:50 PM

தான் எழுதிய புத்தகத்தை நடிகர் விஜயிடம் வழங்கிய தொகுப்பாளர் ரம்யா

சென்னை: பிரபல தொகுப்பாளர் ரம்யா தான் எழுதிய உடல் எடை குறைப்பு குறித்த புத்தகத்தை நடிகர் விஜய்யை சந்தித்து அளித்தார். அதுகுறித்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினியான ரம்யா சுப்ரமணியன் தனது பேச்சு திறமையால் குறுகிய காலத்தில் மக்களின் மனதை கவர்ந்தவர். பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். ரம்யா உடற்தகுதியில் மிகவும் ஆர்வமாக உள்ளார் மற்றும் அடிக்கடி தனது சமூக ஊடக பக்கத்தில் உடற்பயிற்சி தொடர்பான வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

fitness,ramya,video, ,உடற்பயிற்சி, ரம்யா, வீடியோ, நடிகர் விஜய், புகைப்படம்

அந்தவகையில் உடல் எடை குறைப்பு குறித்து புத்தகம் எழுதியுள்ளார். இதை சமீபத்தில் நடிகை சமந்தா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து ரம்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் விஜய்யை சந்தித்த ரம்யா, அவர் எழுதிய புத்தகத்தை பரிசாக கொடுத்தார். இது தொடர்பான புகைப்படத்தை ரம்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Tags :
|
|