Advertisement

போட்டோ ஷூட் எடுத்து கலக்கி எடுக்கும் அனிகா சுரேந்திரன்

By: Nagaraj Sat, 12 Nov 2022 4:34:52 PM

போட்டோ ஷூட் எடுத்து கலக்கி எடுக்கும் அனிகா சுரேந்திரன்

சென்னை: போட்டோ ஷூட் எடுத்து சமூக இணைய தளங்களில் கலக்கி வருகிறார் அஜித்தின் ரீல் மகள் என்று கூறப்படும் அனிகா சுரேந்திரன்.

அஜித்தின் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அஜித்தின் ரீல் மகள் என்று சொல்லும் அளவிற்கு தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் நடிகை அனிகா சுரேந்திரன்.

அதற்குப் பிறகு, இவர் நானும் ரவுடி தான், மிருதன் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். குழந்தை நட்சத்திரமாக இருந்த இவர் தற்போது மளமளவென வளர்ந்து கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுக் கொண்டிருக்கிறார். மேலும் முன்னணி நடிகைகளே வியந்து பார்க்கும் அளவிற்கு பல போட்டோ ஷூட்களை நடத்திவருகிறார்.

அதற்காக இப்போதே ரசிகர்களை தன்னை ஹீரோயினாக பார்க்கும்படி சமூக வலைதளங்களில் டியூன் செய்து வருகிறார். அதாவது மாடர்ன் உடைகளில் தொடர்ந்து புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்.

இந்த குட்டி நயனின் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு பல இளைஞர்களின் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார். இந்நிலையில் இவர் தற்போது சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கும் புகைப்படத்தில் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளையடித்து வருகிறார்.

Tags :