Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ஜவான் படத்தில் பணியாற்றியது குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த அனிருத்

ஜவான் படத்தில் பணியாற்றியது குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த அனிருத்

By: Nagaraj Sun, 01 Oct 2023 1:19:24 PM

ஜவான் படத்தில் பணியாற்றியது குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த அனிருத்

சென்னை: ஜவான் படத்தில் பணியாற்றியது ஒரே நேரத்தில் பல படங்களில் பணியாற்றுவது போல் இருந்தது என்று இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ள அனிருத் ஜவான் படம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக அட்லீ, பிகில் படத்திற்கு பிறகு ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கியிருந்தார். நயன்தாரா விஜய் சேதுபதி உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். கடந்த செப்டம்பர் 7-ந் தேதி வெளியான ஜவான் படம் இதுவரை உலகளவில் 1043 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகியுள்ள அனிருத், தனது சிறப்பான பின்னணி இசைக்காக பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறார்.

anirudh,information,jawaan,victory,working,hindi movie ,அனிருத், தகவல், ஜவான், வெற்றி, பணியாற்றுவது, இந்தி படம்

இதனிடையே ஜவான் பற்றி பல தகவல்களை பகிர்ந்துகொண்ட அனிருத், விக்ரம், ஜெயிலர், ஜவான் என அடுத்தடுத்து பிரமாண்டமான படங்களை வைத்திருந்ததால் கடந்த இரண்டு வருடங்கள் பிஸியாக இருந்துவிட்டேன். வருடத்திற்கு மூன்று படங்கள் மட்டுமே இசையமைக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் கோவிட் தொற்றுக்கு பிறகு நிலைமை மாறிவிட்டது. அதற்கு மேல், ஜவான் படத்தில் பணியாற்றியது ஒரே நேரத்தில் பல படங்களில் பணியாற்றுவது போல் இருந்தது.

"ஜவான் படத்தில், ஒரே நேரத்தில் நிறைய உணர்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன. உதாரணமாக, ஷாருக் சார் வில்லனாக வரும் ரயில் காட்சி, சில நொடிகளில் ஒரு விவசாயியின் கதை இருக்கும். இந்த காட்சிகளை எப்படி இசையுடன் இணைக்கப் போகிறோம் என்பது எல்லாம் சவாலாக இருந்தது. எனவே, ஜவானில் எங்களின் பணி இந்த உணர்வுகள் அனைத்தையும் ஒன்றிணைத்து பார்வையாளர்களுக்கு தடையின்றி ஒலிக்கச் செய்ய சற்று கடினமாக இருந்தது. இதனால் தான் ஜவான் படத்தில் பணியாற்றுவது ஒரே நேரத்தில் இரண்டு முதல் மூன்று படங்களில் பணியாற்றுவது போன்றது என்று தெரிவித்துள்ளார்.

ஜவான் படத்தின் வெற்றியின் மூலம், அனிருத் அடுத்து இந்தியில் இன்னும் பல படங்கள் வாய்ப்பு கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறார். அப்படி வாய்ப்பு வரும்போது இரண்டு தமிழ் படம், ஒன்று இந்தி படம் என்பது தான் என் திட்டம் என்று கூறியுள்ளர்.

Tags :
|