Advertisement

அனிருத் எனக்கு நல்ல நண்பர்... கீர்த்தி சுரேஷ் கொடுத்த விளக்கம்

By: Nagaraj Sun, 17 Sept 2023 8:59:21 PM

அனிருத் எனக்கு நல்ல நண்பர்... கீர்த்தி சுரேஷ் கொடுத்த விளக்கம்

சென்னை: திருமணம் தொடர்பாக பரவும் தகவல் தவறானது, அனிருத் தனக்கு நல்ல நண்பர் என்று நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த தகவல்கள் இணையதளத்தில் அடிக்கடி உலா வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு அவர் கேரள அரசியல் தலைவர் ஒருவரின் மகனை திருமணம் செய்து கொள்வதாக கூறப்பட்டது.

anirudh,commentary,keerthy suresh,marriage,music composer, ,அனிருத், இசையமைப்பாளர், கீர்த்தி சுரேஷ், திருமணம்,

பின்னர், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஸ் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி இருவரும் காதலிப்பதாக வதந்திகள் கிளப்பியது. கேரள தொழில் அதிபருடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறப்பட்டது. இதனை கீர்த்தி சுரேஷ் மறுத்தார். இந்த நிலையில் மீண்டும் இசையமைப்பாளர் அனிருத்துடன் திருமணம் என பரவிய தகவலுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அனிருத்தும், கீர்த்தி சுரேசும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக வட இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இது குறித்து கீர்த்தி சுரேஷ், திருமணம் தொடர்பாக பரவும் தகவல் தவறானது, அனிருத் தனக்கு நல்ல நண்பர் எனக் கூறியுள்ளார்.

Tags :