Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் புகைப்படங்களை வெளியிட்ட அனிதா சம்பத்

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் புகைப்படங்களை வெளியிட்ட அனிதா சம்பத்

By: Nagaraj Sat, 15 July 2023 1:32:23 PM

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் புகைப்படங்களை வெளியிட்ட அனிதா சம்பத்

சென்னை: ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அனிதா சம்பத்.

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பாப்புலர் ஆனவர் தான் அனிதா சம்பத். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மேலும் புகழ் பெற்றார். இருப்பினும் அங்கு அவர் மீது சில விமர்சனங்களும் எழுந்தது.

 ,ஆஸ்பத்திரி, அனிதா சம்பத், சிகிச்சை, புகைப்படங்கள், கணவர், ஆறுதல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகு அவரது youtube சேனல் மற்றும் சோசியல் மீடியா பக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அனிதா சம்பத் தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கையில் ட்ரிப் ஏறிக் கொண்டிருப்பது போன்று சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அனிதா பதிவிட்ட புகைப்படங்களை எடுத்து தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்து, "எல்லாமே சரி ஆகிடும் பப்பு" என்று அவரது கணவர் ஆறுதல் கூறியுள்ளார்.

Tags :