Advertisement

பிக்பாஸ் வீட்டின் இந்த வார தலைவராக அறிவிக்கப்பட்ட அனிதா!

By: Monisha Mon, 07 Dec 2020 2:43:15 PM

பிக்பாஸ் வீட்டின் இந்த வார தலைவராக அறிவிக்கப்பட்ட அனிதா!

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய தலைவர் தேர்வு செய்யப்படும் நிலையில் தற்போது புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் ரமேஷ் கேப்டனாக இருந்த நிலையில் இந்த வார கேப்டனை தேர்வு செய்ய போட்டி ஒன்று வைக்கப்படுகிறது.

வழக்கமாக ஒரு வாரம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டவர்கள் மூவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஒரு டாஸ்க் வைக்கப்பட்டு அந்த டாஸ்க்கில் வெற்றி பெறுபவரே பிக் பாஸ் வீட்டில் தலைவராகத் தேர்வு செய்யப்படுவது வழக்கம். ஆனால் முதல் முறையாக வீட்டில் இருக்கும் அனைவரும் தலைவர் போட்டியில் போட்டியிடப் போகிறார்கள் என்ற அறிவிப்பு வந்துள்ளது.

bigg boss,anitha,archana,task,leader ,பிக்பாஸ்,அனிதா,அர்ச்சனா,டாஸ்க்,தலைவர்

பின்னர் இதற்கான டாஸ்க் ஒன்றை பிக்பாஸ் வைக்கின்றார் இந்த டாஸ்க்கில் அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொண்ட நிலையில் இந்த டாஸ்க்கில் அனிதா வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.

இதனை அடுத்து பிக்பாஸ் வீட்டின் இந்த வார தலைவர் அனிதா என்று அறிவிக்கப்பட்டவுடன் பாலாஜி உள்பட மற்றவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் அர்ச்சனாவும் அவரது குரூப்பினர்களும் பார்க்கும் பார்வையிலேயே அனிதா தலைவரானது அவர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்த வாரம் அனிதா தலைவர் ஆனதை அடுத்து அவர் நாமினேட் செய்யப்பட மாட்டார் என்பதால் அடுத்த வாரமும் அவர் பிக்பாஸ் வீட்டில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags :
|
|