Advertisement

மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

By: Monisha Thu, 19 Nov 2020 11:02:44 AM

மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கிய 'ஈஸ்வரன்' படத்தின் டீசர் தீபாவளி விருந்தாக வெளியான நிலையில் இன்று அவர் நடித்து வரும் இன்னொரு படமான 'மாநாடு' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என நேற்று இயக்குனர் வெங்கட்பிரபு தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் 'மாநாடு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நவம்பர் 21 ஆம் தேதி 10.44 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் சிம்புவின் டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

simbu,maanadu,first look poster,director,venkatprabhu ,சிம்பு,மாநாடு,பர்ஸ்ட் லுக் போஸ்டர்,இயக்குனர்,வெங்கட்பிரபு

மேலும் இந்த அறிவிப்பில் ஒரு போஸ்டரும் வெளியாகி உள்ளது என்பதும் இஸ்லாமிய இளைஞர் வேடத்தில் நடிக்கும் சிம்பு துப்பாக்கியை அருகில் வைத்துக்கொண்டு தொழுகையில் இருப்பது போன்றும், பின்னணியில் அரசியல் கலவரம் நடப்பது போன்றும் அந்த போஸ்டரில் உள்ளது. இந்த போஸ்டரே அட்டகாசமாக இருக்கும் நிலையில் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் எப்படி இருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது

இந்த நிலையில் சிம்புவின் 'மாநாடு' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் 21ஆம் தேதி வெளிவர இருப்பதை அறிந்த சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும், இது குறித்த ஹேஷ்டேக்கை சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

Tags :
|