Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • சர்தார் திரைப்படம் வரும் 18ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாவதாக அறிவிப்பு

சர்தார் திரைப்படம் வரும் 18ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாவதாக அறிவிப்பு

By: Nagaraj Sat, 12 Nov 2022 4:34:17 PM

சர்தார் திரைப்படம் வரும் 18ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாவதாக அறிவிப்பு

சென்னை: சர்தார் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நவம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது என்று படக்குழு அறிவித்துள்ளது.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்தார். இந்தி நடிகர் சங்கி பாண்டே மிரட்டும் வில்லனாக நடித்துள்ளார். மேலும், ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

karthi,starrer,sardaar otd. ,ஓ.டி.டி., கார்த்தி, சர்தார், திரைப்படம்

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். ‘சர்தார்’ திரைப்படம் கடந்த அக்டோபர் 21ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் விமர்சன ரீதியாகவும், நிதி ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தின் OTD ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி ‘சர்தார்’ திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நவம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது. ஆஹா OTT தளம் இது தொடர்பான வீடியோவை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Tags :
|