Advertisement

ஈஸ்வரன் படத்தின் முதல் பாடல் 14ம் தேதி வெளியாவதாக அறிவிப்பு

By: Nagaraj Sat, 12 Dec 2020 3:25:32 PM

ஈஸ்வரன் படத்தின் முதல் பாடல் 14ம் தேதி வெளியாவதாக அறிவிப்பு

ஈஸ்வரன் படம் பற்றிய அப்டேட் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமன் இசையில் உருவாகியுள்ள படத்தின் முதல் பாடல் வருகின்ற 14-ஆம் தேதி வெளியாகுமென அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருக்கிறது.

கமர்ஷியல் பாணியில் நல்ல கதையம்சம் உள்ள படங்களை சுசீந்திரன் தொடர்ச்சியாக கொடுத்து வருகிறார். அவரது இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் என்பது இதில் முதன்மையானதாக இருக்கிறது.

simbu,eeswaran movie,update,first song,14th ,
சிம்பு, ஈஸ்வரன் படம், அப்டேட், முதல் பாடல், 14ம் தேதி

அதுமட்டுமின்றி இப்படத்திற்காக உடல் எடை, தோற்றம் என அனைத்திலும் சிம்பு பல்வேறு மாற்றங்களை செய்திருக்கிறார்.

பல்வேறு சுவாரஸ்யமான அம்சங்கள் நிரம்பியிருப்பதால் இப்போது 'ஈஸ்வரன்' வெற்றியை பலரும் யூகிக்க தொடங்கியுள்ளனர். சிம்பு, சுசீந்திரன், பாரதிராஜா, கிராமத்து கதைக்களம் என அதற்கான சாத்தியங்களும் நிறைய தென்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் வருகின்ற 14-ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
|
|