Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • விக்ரம் படத்தின் மற்றொரு சாதனை... தெலுங்கில் மட்டும் ரூ.25 கோடிக்கு மேல் வசூல் வேட்டை

விக்ரம் படத்தின் மற்றொரு சாதனை... தெலுங்கில் மட்டும் ரூ.25 கோடிக்கு மேல் வசூல் வேட்டை

By: Nagaraj Mon, 13 June 2022 5:03:04 PM

விக்ரம் படத்தின் மற்றொரு சாதனை... தெலுங்கில் மட்டும் ரூ.25 கோடிக்கு மேல் வசூல் வேட்டை

சென்னை: தெலுங்கில் மட்டும் ரூ. 25 பிளஸ் கோடிகளை வசூல் செய்துள்ளது விக்ரம் படம் சாதித்துள்ளது. இதுவரை அங்கு டப் செய்யப்பட்டு வெளியான திரைப்படங்களில் விக்ரம் தான் அதிக வசூலை ஈட்டியுள்ளது.
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விக்ரம், பெரிய எதிர்ப்பார்பிற்கு இடையே வெளியான விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து பிளாக் பஸ்டர் வரவேற்பை பெற்றுள்ளது.

high collection,telugu,vikram film,dubbing,sakkaippodu ,அதிக வசூல், தெலுங்கு, விக்ரம் படம், டப்பிங், சக்கைப்போடு

சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் என முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள விக்ரம் திரைப்படம் தமிழகத்தை தாண்டி மற்ற மாநிலங்களிலும் ஹிட் அடித்துள்ளது. உலகளவில் ரூ. 300 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ள விக்ரம் திரைப்படம் இன்னும் வரும் நாட்களில் இதையும் தாண்டி வசூல் செய்யும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இந்நிலையில் விக்ரம் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் சக்கைப்போடு போட்டு வருகிறது. அதன்படி தற்போது விக்ரம் திரைப்படம் தெலுங்கு மாநிலங்களில் படைத்துள்ள வசூல் சாதனை குறித்து அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
தற்போது வரை தெலுங்கில் மட்டும் ரூ. 25 பிளஸ் கோடிகளை வசூல் செய்துள்ளதாம். இதுவரை அங்கு டப் செய்யப்பட்டு வெளியான திரைப்படங்களில் விக்ரம் தான் அதிக வசூலை ஈட்டியுள்ளது.

Tags :
|