Advertisement

மெகா பட்ஜெட் படத்தில் நடிக்க அனு இமானுவேல் ஒப்பந்தம்!

By: Monisha Mon, 19 Oct 2020 12:44:59 PM

மெகா பட்ஜெட் படத்தில் நடிக்க அனு இமானுவேல் ஒப்பந்தம்!

மெகா பட்ஜெட் படத்தில் நடிக்க 'நம்ம வீட்டு பிள்ளை' படத்தின் நாயகி அனு இமானுவேல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர்கள் சித்தார்த் மற்றும் சர்வானந்த் இணைந்து நடிக்கும் திரைப்படம் மெகா பட்ஜெட்டில் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஒரு நாயகியாக அதிதி ராவ் ஹைத்ரி நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்றும் தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது மேலும் ஒரு நாயகி இணைந்துள்ளார். விஷால் நடித்த 'துப்பறிவாளன்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அதன் பின்னர் சிவகார்த்திகேயன் நடித்த 'நம்ம வீட்டு பிள்ளை' படத்தின் நாயகியாக நடித்த அனு இமானுவேல் இந்த படத்தில் இணைந்து உள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

anu emanuel,contract,siddharth,sarvanand,ajay bhupathi ,அனு இமானுவேல்,ஒப்பந்தம்,சித்தார்த்,சர்வானந்த்,அஜய்பூபதி

இந்த படத்தில் இரண்டு நாயகிகள் இருந்தாலும் இருவருக்கும் சம அளவில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டு இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 'மகா சமுத்திரம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை அஜய்பூபதி என்பவர் இயக்கி வருகிறார்.

Tags :