Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • நட்சத்திரம் நகர்கிறது படத்தை பார்த்து ரஞ்சித்தை பாராட்டிய அனுராக் காஷ்யப்

நட்சத்திரம் நகர்கிறது படத்தை பார்த்து ரஞ்சித்தை பாராட்டிய அனுராக் காஷ்யப்

By: Nagaraj Mon, 29 Aug 2022 3:01:58 PM

நட்சத்திரம் நகர்கிறது படத்தை பார்த்து ரஞ்சித்தை பாராட்டிய அனுராக் காஷ்யப்

சென்னை: ரஞ்சித்தை பாராட்டிய மும்பை இயக்குனர்... நட்சத்திரம் நகர்கிறது படம் பார்த்த இயக்குநர் அனுராக் காஷ்யப், பா.ரஞ்சித்தை கட்டிப்பிடித்து பாராட்டியுள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள நட்சத்திரம் நகர்கிறது வருகிற 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. முதன்முறையாக இசையமைப்பாளர் தென்மாவுடன் பா.ரஞ்சித் கைகோர்த்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.

காதலின் பல்வேறு பரிமாணங்கள் குறித்து பேசும் இப்படத்தின் டிரெய்லரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் சிறப்புக்காட்சி சமீபத்தில் மும்பையில் திரையிடப்பட்டது.

pa. ranjith,sasikumar,appreciation,director anurag,watched the film ,பா.ரஞ்சித், சசிக்குமார், பாராட்டு, இயக்குனர் அனுராக், படம் பார்த்தனர்

அப்போது ஹிந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப், நடிகை நந்திதா தாஸ் உள்ளிட்டோர் படம் பார்த்தனர். இந்நிலையில் படம் பார்த்த இயக்குநர் அனுராக் காஷ்யப்புக்கு நட்சத்திரம் நகர்கிறது படம் மிகவும் பிடித்துவிட்டதாம். இதனையடுத்து அவர் இயக்குநர் பா.ரஞ்சித்தை கட்டிப்பிடித்து பாராட்டியுள்ளார்.

அனுராக் காஷ்யப் எப்பொழுதும் நல்ல தமிழ் படங்களை பாராட்டத் தவறுவதில்லை. அவரது 'கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர்' படத்துக்கு சசிகுமாரின் 'சுப்ரமணியபுரம்' படம் முன்மாதிரியாக இருந்ததாக அவர் பல தருணங்களில் தெரிவித்துள்ளார்.

Tags :