- வீடு›
- பொழுதுபோக்கு›
- பிக்பாஸ் வீட்டில் மகளை நினைத்து கேவி, கேவி அழுத அர்ச்சனா
பிக்பாஸ் வீட்டில் மகளை நினைத்து கேவி, கேவி அழுத அர்ச்சனா
By: Nagaraj Thu, 17 Dec 2020 8:31:20 PM
இவரும் காப்பியடிக்கிறாருப்பா... பிக்பாஸ் வீட்டில் தைரியமாக பேசிக் கொண்டிருந்த அர்ச்சனாவை அழ வைக்க பிக்பாஸ் கையாண்ட அந்த யுக்தியை வைத்து சமூக வலைதளங்களில் செம்மயான ட்ரோல்கள் பறந்து வருகின்றன.
சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தில் கண்ணை மூடிக் கொண்டு நினைத்துப் பார்க்க சொல்லும் காட்சிகளை அப்படியே காப்பி அடித்து கொண்டார் பிக்பாஸ் என்று அவரை கலாய்த்து கொண்டு வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் கன்ஃபெஷன் ரூமில் இதுவரை சுரேஷ் சக்கரவர்த்தி கேவி
கேவி அழுதது பார்வையாளர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில்
இந்த வாரம் ஷிவானி, ரியோ, அனிதாவை தொடர்ந்து அர்ச்சனாவையும் கன்ஃபெஷன்
ரூமுக்கு அழைத்து அழ வைத்து வருகிறார் பிக்பாஸ்.
இதில் கேவி கேவி
அர்ச்சனா அழுதாலும் ரசிகர்கள் அது எல்லாம் ஓவர் ஆக்டிங் என்று
விமர்சிக்கின்றனர். தனது மகள் ஸாராவை பிரிந்து 73 நாட்கள் வாடும் அம்மாவின்
நிஜ அழுகையாகவும் அவரது ரசிகர்கள் அதனை கருதி உள்ளனர்.