Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் என்ட்ரி கொடுத்த அர்ச்சனா

பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் என்ட்ரி கொடுத்த அர்ச்சனா

By: Nagaraj Fri, 16 Oct 2020 09:08:21 AM

பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் என்ட்ரி கொடுத்த அர்ச்சனா

நேற்றைய பிக்பாஸ் வீட்டு போட்டியாளர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. செமத்தியாக நியூ என்ட்ரியாக வந்துள்ளார் நிகழ்ச்சி தொகுப்பாளர் அர்ச்சனா.

விஜய் டிவியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ்' ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கியது . இதில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, 'சூப்பர் சிங்கர்' ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் 'விஜய் டிவி' மற்றும் 'ஜீ தமிழ்' மூலம் ஃபேமஸான தொகுப்பாளர் அர்ச்சனா என்ட்ரி கொடுத்து மற்ற போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

big boss 4,archana,degree,competitors,aziz ,பிக்பாஸ் 4, அர்ச்சனா, பட்டம், போட்டியாளர்கள், ஆஜிஸ்

வீட்டுக்குள் வந்ததும் தன் பாணியில் அனைவரையும் கலாய்த்தார் அர்ச்சனா. தொடர்ந்து பிக்பாஸ் அர்ச்சனாவை வரவேற்று உங்கள் டாஸ்க்கை செய்யுங்கள் என்று கூற ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு பட்டம் கொடுக்கிறார் அர்ச்சனா.

பாலாஜி முருகதாஸுக்கு 'no comment simply waste', ஷிவானி நாராயணனுக்கு 'atmosphere artist', அனிதா சம்பத்துக்கு 'BBT4 trending', அறந்தாங்கி நிஷாவுக்கு 'ஆமா சாமி', சனம் ஷெட்டிக்கு 'நமத்து போன பட்டாசு' என பட்டங்களை கொடுக்கிறார் அர்ச்சனா. தொடர்ந்து ஆஜிஸ்-ன் எவிக்ஷன் கார்டை பாலாஜி எடுத்து மறைத்து வைத்து கலாய்க்கிறார். இப்படி பிக்பாஸ் வீட்டில் சுவாரஸ்யம் கூடிக் கொண்ட போகிறது.

Tags :
|