Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கின்றனரா?... கோலிவுட்டில் பரபரப்பு தகவல்கள்

ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கின்றனரா?... கோலிவுட்டில் பரபரப்பு தகவல்கள்

By: Nagaraj Wed, 31 May 2023 7:36:20 PM

ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கின்றனரா?... கோலிவுட்டில் பரபரப்பு தகவல்கள்

சென்னை: ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கின்றனரா?... லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள கடைசி திரைப்படத்தில் புதிய திருப்பமாக நடிகர் கமல்ஹாசன் இணைந்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

கோடம்பாக்கத்தின் தற்போதைய ஹாட் டாபிக் இது தான் என்கிறார்கள் கோலிவுட் வட்டாரத்தினர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் , உலகநாயகன் கமல ஹாசனும் இணைந்து வேலை செய்து பல வருடங்கள் ஆகிறது. ஆனால் இந்த இரு பிரபலங்களையும் இணைத்து பார்க்கவேண்டும் என்பது தமிழ் சினிமா ரசிகர்களின் நீண்ட கால கனவு எனலாம்.

தற்போது இந்த இருவரும் இணைகிறார்கள் என்கிற செய்தியே கோடம்பாக்க வட்டாரத்தையும், தமிழ் சினிமா ரசிகர்களையும், ஒரு சேர ஆச்சர்யத்திலும், ஆனந்தத்திலும் ஆழ்த்தியுள்ளது எனலாம்.

நடிகர் கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தை தயாரித்ததன் பிறகு அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வருகிறார்.

rajini,kamal,director lokesh kanagaraj,last movie,info ,ரஜினி, கமல், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கடைசி படம், தகவல்

அந்த வகையில் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.21, விக்னேஷ் சிவன் இயக்க உள்ள புதிய படம், நெல்சன் - தனுஷ் கூட்டணியில் உருவாக உள்ள படம், மணிரத்னம் இயக்கத்தில் தான் நடிக்க உள்ள படம் என வரிசையாக தயாரித்து வரும் கமல், தற்போது ரஜினியின் படத்தையும் தட்டி தூக்கி உள்ளார் என்பது தான் கோலிவுட்டில் தற்போதைய லேட்டஸ்ட் ஹாட் டாப்பிக்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் ரஜினி, அதுதான் அவர் நடிக்கும் கடைசி படமாக இருக்கும் என கூறப்படுவதால், மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது புது திருப்பமாக கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தான் அப்படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags :
|
|